திங்கள், 4 மார்ச், 2013

KASPERSKY antivirus இலவசமாக பயன்படுத்த ஒரு சின்ன ட்ரிக்?


கணினி உலகின் சிறந்த ஆன்டிவைரஸ் தொகுப்பான KASPERSKY ஆன்டிவைரஸினை இலவசமாக பயன்படுத்துவது எப்படி என்று தான் இந்த பதிப்பு.

கணினியில் வைரஸின் தாக்கம் இல்லாமல் பாதுகாக்க தான் ஆன்டிவைரஸினை பயன்படுத்துகிறோம். ஆனால் அந்த ஆன்டிவைரஸினை பெற அதிக தொகையை செலுத்த வேண்டியுள்ளது. அப்படியே இலவச தொகுப்பினை பயன்படுத்தினாலும் அது அந்த அளவிற்கு கைக்கொடுப்பது இல்லை. அதே மாறி அப்டேட் செய்வதிலும் KASPERSKY ஆன்டிவைரஸ் சிறந்தது. மிக சிறிய சிறிய பைலாக அப்டேட் செய்துக்கொள்கிறது.
இந்த ஆன்டிவைரஸினை இலவசமாக பெற முதிலில் இதன் TRIALயை டவுண்லோட் செய்துக்கொள்ளுங்கள். DOWNLOAD TRIAL இந்த லிங்கை பயன்படுத்தி டவுண்லோட் செய்துக்கொள்ளுங்கள். பின்னர் KASPERSKY TRIAL VERSIONயை தங்களின் கணினியில் இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள். இந்த சிரியல் கீ பைல்களையும் டவுண்லோட் செய்துக்கொள்ளுங்கள். இது தான் முக்கியம் மிகவும்.DOWNLOAD SERIAL KEYS.

பின்னர் தங்களின் தங்களின் கணினியில் இண்டர்நெட் இணைப்பினை துண்டித்துவிட்டு விடுங்கள். பின்னர் KASPERSKYஆன்டிவைரஸ் தொகுப்பினை இயக்குங்கள், அதில் ACTIVATION PRODUCT என்பதினை கிளிக் செய்யவும். தற்போது ஓர் விண்டோ தோன்றும். அதில் கீழ்காணும் சிரியல் கீயினை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும். உதவிக்கு படத்தினை காணவும், பின்னர் NEXT என்பதனை கிளிக் செய்யவும்.

SERIAL KEY TO PASTE:
11111-11111-11111-1111X



தற்போது தோன்றும் விண்டோவில் கீ பைலினை தேடவும் என குறிப்பிடப்படும். தற்போது நீங்கள் செய்ய வேண்டியது தான் முக்கியம். BROWSE என்பதனை கிளிக் செய்து நீங்கள் டவுண்லோட் செய்த சீரியல் கீ பைல்களை தேர்வு செய்யவும்.

பின்னர் NEXT  என்பதினை கிளிக் செய்யவும். அவ்வளவு தான் முடிந்தது. KASPERSKY ஆன்டிவைரஸினை தொகுப்பினை இலவசமாக பயன்படுத்தலாம்.....

நன்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால் தெரிவிக்கவும்.  எழுதியவர் நண்பர்,,,,,,

உங்க பேஸ்புக் பிரண்ட்ஸ் லிஸ்டை பிறர் பார்க்காம இருந்து மறைக்க வேண்டிமா ஒரு வழி இருக்கு ?


நாளுக்கு நாள் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துவரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. அதுவும் மின்னல் வேகத்தில். இதனால் பயன்யடைவர்களும் உண்டு, கேட்டுபோகிறவர்களும் உண்டு. இந்த மாதிரி சமூக வலைதளங்களை பயன்படுத்தினால் மனதில் கொள்ள வேண்டிய மிக முக்கிய ஒன்று, நம்மை பற்றி முக்கிய தகவல்களை இங்கு மற்றவர்களுடன் பகிற்வதை தவிற்ப்பது தான்.

இந்த பதிவும் அத்தகைய ஓர் செய்தி பற்றி தான். பேஸ்புக்கின் தளத்தில் தங்களின் பிரண்ட்ஸ் பற்றி விவரத்தை அனைவரும் அறியும் படி தான் பொதுவாக இருக்கும். இதை தாங்கள் மாற்ற விரும்பினால், அதாவது எனது நண்பர்களை தெரியாதவர்கள் எவரும் அறிவதை தாங்கள் விரும்பவில்லை என்றால்! இந்த பதிவு தங்களுக்கு தான். தொடர்ந்து படியுங்கள். இந்த செய்கையினை மேற்கொள்ள

STEP 01: முதலில் தங்களின் பேஸ்புக் அக்கொண்டில் நுழைந்துக்கொள்ளுங்கள்

STEP 02: பின்னர் EDIT PROFILE என்பதினை கிளிக் செய்யுங்கள். உதவிக்கு மேலே உள்ள புகைப்படத்தை காணுங்கள்

STEP 03: பின்னர் தோன்றும் விண்டோவில் வலதுகை ஓரத்தில் பார்த்தால் சில மெனுக்கள் இருக்கும் அதில் FRIENDS AND FAMILY என்பதினை கிளிக் செய்யவும்.
உதவிக்கு மேலே உள்ள புகைப்படத்தை காணுங்கள்.

STEP 04:தற்போது தோன்றும் திரையில் FRIENDS என்பததை கிளிக் செய்யவும். ஓரத்தில் சற்று உற்றி கவனித்தால் ஓர் உலக உருண்டை போன்ற ஜகான் ஒன்று இருக்கும் அதை கிளிக் செய்யவும்

STEP 05: தற்போது சிறிய பாப் அப் விண்டோவை போன்று ஓன்று தோன்றும் அதில் மொத்தம் நான்கு வழிமுறைகள் இருக்கும். முதலில் 1.PUBLIC 2.FRIENDS 3.ONLY ME 4.CUSTOM


PUBLIC: இதனை தாங்கள் தேர்வு செய்தால் தங்களின் பேஸ்புக்கின் பிரண்ட்ஸ் லிஸ்டை யார் வேண்டுமானலும் காணலாம்.


FRIENDS: இதனை தேர்வு செய்தால் தங்களின் பிரஸ்ட்ஸ் லிஸ்டை தங்களின் நண்பர்கள் மட்டுமே பார்க்க முடியும்.


ONLY ME: இதனை தேர்வு செய்தால் தங்களின் பிரண்ட்ஸ் லிஸ்டை நீங்கள் மட்டுமே பார்க்க இயலும்.


CUSTOM: இதனை தேர்வு செய்து, தாங்கள் குறிப்பிடும் சில பேருக்கும் மட்டும் தங்களின் பிர்ண்ட்ஸ் லிஸ்ட் பார்க்கும் மாறு அமைக்கலாம்.

இறுதியாக SAVE CHANGES என்பதனை கிளிக் செய்து, தங்களின் மாற்றங்களை தங்களின் அக்கொண்டில் செயல்போறுமாறு அமைத்துக்கொள்ளுங்கள். 


இந்த தகவலை எழுதியவர் நண்பன் குரு (எ) தாசன் க.பொறியியல் நன்றி ,,,,,

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

மிக எளிதாக தமிழில் டைப் செய்வது எப்படி? - புதியவர்களுக்கு



இணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்களுக்கு மிக எளிதாக தட்டச்சு செய்யும் வசதி தருவது Google Tamil Transliteration. இதனை எப்படி பயன்படுத்துவது என்று இந்தப் பதிவின் மூலம் அறியலாம். 

1.முதலில் இங்கே சென்று தட்டச்சு மென்பொருளை தரவிறக்கம் செய்யவும். இதில் தமிழ் மொழியை தெரிவு செய்த பின் 32Bit/64Bit என்பதை தெரிவு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளவும். எது என்று தெரியாதவர்கள் 32Bit தெரிவு செய்யவும். 

2.Windows 7/Vista/XP பயன்படுத்தும் அன்பர்கள் இதை பயன்படுத்த இயலும். 

3.இதை இப்போது இன்ஸ்டால் செய்யவும். 

4.இன்ஸ்டால் செய்து முடித்தவுடன் Desktop -Task Bar இல் Right Click செய்து Toolbars -> Language bar என்பதை தெரிவு செய்யவும். 



இதில் இந்த வசதி வராத நண்பர்கள் கீழே உள்ளதை பின் பற்றவும். 

5. Windows 7/Vista பயனாளிகள்
  • Control Panel ->Date, Time, Language, and Regional Options--> Regional and Language Options -> Keyboard and Languages என்பதற்கு செல்லவும். 
  • Change keyboards... என்பதை கிளிக் செய்து Text services and input languages என்பதை ஓபன் செய்யவும். 
  • Language Bar க்கு வரவும். 
  •  Language Bar -ல் உள்ள  Docked in the taskbar  என்ற ரேடியோ பட்டனை Enable செய்ய வேண்டும். 
  • இப்போது Apply கொடுக்கவும்.  இப்போது நீங்கள் மேலே கூறி உள்ள Step-4 ஐ செய்யவும். 
6.Windows XP பயனாளிகள்
  • Control Panel -> Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab என்பதற்கு செல்லவும். 
  • முதலில் System configuration, என்பதில் Turn off advanced text services என்பது கிளிக் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.           

  • Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab என்பதற்கு மீண்டும் செல்லவும்.  
  • இப்போது Settings>Language Bar ஐ கிளிக் செய்து அதில் Details >Language bar என்பதை தெரிவு செய்து வருவதில் Show the Language bar on the desktop என்பதை கிளிக் செய்து விடவும். 
  • இப்போது எல்லாவற்றையும் Apply கொடுத்து விடவும். 

7. இப்போது உங்கள் Tool Bar இல் கீழே உள்ளது போல ஒன்று வந்து சேர்ந்து விடும். இதில் தட்டச்சு செய்யும் போது கிளிக் செய்தால் Tamil என்று வரும். 


8.இது உங்களுக்கு Desktop இல் இவ்வாறு தோற்றம் அளிக்கும்.



9. இப்போது நீங்கள் எளிதாக தட்டச்சு செய்ய முடியும். உதாரணம்: 

Amma - அம்மா, 
karpom - கற்போம் 


இதில் மாற்று வார்த்தைகள் அடுத்தடுத்து வருவதை கவனிக்கவும். இதை Key Board-இல் உள்ள Arrow பட்டன்களை பயன்படுத்தி தெரிவு செய்ய முடியும். 

10.இதில் சரியாக தட்டச்சு செய்தும் உங்களுக்கு சில எழுத்துகள் வரவில்லை என்றால் Ctrl+K என்பதை கொடுத்து குறிப்பிட்ட எழுத்தை இடைச் செருகலாக சேர்க்கலாம். ‌

11. இதில் இருந்து உடனடியாக ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய CTRL+G கொடுக்கவும். 
               

                              -s.v.udhayakumar palathurai

கட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்


மென்பொருட்கள் இல்லாமல் நாம் கணினியை பயன்படுத்தவே முடியாது. நம்முடைய அத்தனை செயல்களும் ஏதோ ஒரு மென்பொருளை சார்ந்தே இருக்கும். இதில் நிறைய மென்பொருட்கள் நமக்கு இலவசமாகவே கிடைக்கின்றன. அதில் சில நமக்கு கட்டாயம் தேவைப்படும் அவற்றைப் பற்றி பார்ப்போம். 

Browser

ப்ரௌசர் என்பது இல்லாமல் நீங்கள் இப்போது இந்த பதிவை படிக்க முடியாது. இணையத்தில் நாம் செயல்பட ப்ரௌசர் ஒரு கட்டாய தேவை. இதில் சிறந்த இரண்டு. 

Antivirus  

அடிக்கடி பென்டிரைவ் அல்லது இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யும் போது நம் கணினியில் வைரஸ் வர வாய்ப்பு உள்ளது. அம்மாதிரியான தருணங்களில் அவற்றை தடுக்கவோ அல்லது தவிர்க்கவோ ஒரு ஆண்டி வைரஸ் மென்பொருள் தேவை. அவற்றில் சிறந்த இரண்டு. 

File Compression Software 

File Compression Software என்பது நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று. இதில் winzip மற்றும் winrar போன்றவை கட்டண மென்பொருட்கள். இதை செய்ய சிறந்த இலவச மென்பொருட்கள். 

Image/Graphics editor, paint program, and picture organizer

இமேஜ் எடிட்டர் என்பது நமக்கு அடிக்கடி தேவைப்படும் ஒன்று. இதில் பெரும்பாலான மென்பொருட்கள் நமக்கு இலவசமாக கிடைப்பது இல்லை. ஆனால் சில நமக்கு இலவசமாக பல வசதிகளை தருகின்றன. அவற்றில் சிறந்தவை. 


கணினியில் ஓய்வு நேரங்களில் நாம் செய்வது பாடல்கள் கேட்பது மற்றும் படங்கள் பார்ப்பது. அத்தோடு Video Editor, Video Converter போன்றவை தொழில்ரீதியாக உள்ள Multimedia Tools. இதில் சிறந்த இலவச மென்பொருட்கள். 

Office Tools 

MS Office க்கு மாற்றாக பல இலவச மென்பொருட்கள் உள்ளன. அவற்றில் சிறந்தவை. 

                                                                                         -        s.v.udhaya kumar palathurai

Internet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க


சிலருக்கு அவர்களது internet browsing ஸ்பீட் ரொம்பவே குறைவாக இருக்கும்.இதை அதிகரிக்க எந்த சாஃப்ட்வேரும்  தேவை இல்லை.பின்வரும் படிசெய்தால் போதும்.


1. XP -->கிளிக் programs--> Run

 windows 7 க்கு programs---> search box---> Type "Run"

2. Run box இல் கீழே உள்ளதை டைப் செய்யவும் 

gpedit.msc




3. இப்போது வரும் புதிய விண்டோக்களில் பின்வருவதை கிளிக் செய்யவும்.


  • Computer Configuration
  • Administrative Templates
  • Network
  • QoS Packet Scheduler
  • Limit Reservable Bandwidth


4. இதில் Not Configured என்பது கிளிக் செய்யப்பட்டு இருக்கும் இதனை Enable என மாற்றி பின்னர் படத்தில் உள்ளது போல கீழே உள்ள 20 ஐ 0 ஆக்கவும்.



இப்போ OK or APPLY செய்யவும்.

கவனிக்க இது 20% வேகத்தை கூட்டவே. மிக அதிகமான வேகத்தை எதிர்பார்க்க அதற்கேற்ப இணைய இணைப்பு இருக்க வேண்டும். 

சு.உதயகுமார்  பாலத்துறை

ஹாண்ட் ப்ரேக்


DVD வீடியோக்களை MP4 அல்லது MKV வீடியோ வகைகளுக்கு கன்வெர்ட் செய்ய ஒரு சில மென்பொருட்கள் சந்தையில் இருந்தாலும் HandBrake எனும் கருவி ஓர் கட்டற்ற சுதந்திர இலவச மென்பொருள் ஆகும். 
 
இந்த மென்பொருள் விண்டோஸ், லினக்ஸ் மற்றும் மேக் OS இயங்குதளங்களில் இயங்கும் படியாக தனித்தனியாக பொதிகளில் தரவிறக்க கிடைக்கிறது. தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது. 
இதன் File மெனுவில் உள்ள Source பொத்தானை அழுத்தி, மாற்ற வேண்டிய DVD வீடியோ  கோப்பு அல்லது Video_TS Folder ஐ தேர்வு செய்து கொள்ளலாம். 
Tools menu வில் Options க்ளிக் செய்து General டேபில் output folder – location ஐ கொடுக்கலாம்.  பிறகு  மூலத்திரையில் Output settings இற்கு கீழாக உள்ள container drop down list -இல் MP4 அல்லது MKV கோப்பு வகையை தேர்வு செய்து கொள்ளலாம்.  
மேலும் இதில் Video filters, Sub Titles, Chapters, Audio, video codec மாற்றுவதற்கான வசதியும் தரப்பட்டுள்ளது. 
 
தேவையான அனைத்து settings களையும் செய்த பிறகு மேலே உள்ள Start பொத்தானை அழுத்தி காத்திருக்க வேண்டியதுதான். 
மொத்தத்தில் வீடியோ பிரியர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒரு இலவச மென்பொருள் கருவியாகும்.

.

ஆன்லைனில் PAN Card ரூ. 94/- NRI – ரூ.744/- மட்டுமே


பத்து வருடங்களுக்கு முன்பாக நான் PAN Card பெற முயன்ற பொழுது, (உடனடியாக ஒரு டீலர்ஷிப் எடுப்பதற்காக) Income Tax அலுவலகத்தில், வியாபாரிகளின் கணக்குகளை சரிபார்த்து சமர்ப்பித்து வரும் ஒரு தனியார் கணக்கரிடம், ரூ. 350/- கொடுத்து, பிறகு ஒரு மாதத்திற்கு பிறகு பான் கார்டு பெறப்பெற்றேன்.   
ஆனால், அதில் First name, Last name உல்டாவாகி, பெயரே தலைகீழாக மாறிப்போய், உடனடியாக வேறு யாரும் டீலர்ஷிப் எடுக்க முயல்வதற்குள்ளாக, ஏதாவது செய்ய வேண்டுமே என்று, மறுபடியும் பல கடிதங்கள் மற்றும் ரூ. 500/-  மேலாக செலவழித்து மீண்டும் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் சரியான பெயரில் பான் கார்டு கிடைக்கப் பெற்றேன். 
ஆனால் தற்பொழுது பான் கார்டு பெறும் வழி மேலும் எளிதாக்கப் பட்டுள்ளது. மேலும் ஆன்லைனிலேயே பெறும் வகையில் UTI நிறுவனம் இந்த வசதியை நமக்கு எளிதாக்கியுள்ளது. 
 
இதற்காக ரூபாய் 94/- NRI களுக்கு ரூ. 744/- மட்டுமே பெறப்படுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், நாமே நிரப்புவதால் பல பிழைகள் தவிர்க்கப் படுகின்றன. இந்த தளத்தின் மூலமாக மட்டுமின்றி, வேறு எப்படி  Apply செய்த பான் கார்டின் Status ஐ அறியவும் PAN Verification என்ற வசதி தரப்பட்டுள்ளது இந்த தளத்தின் தனிச் சிறப்பு.  

UTI Technology Services Limited

.

பென் டிரைவ் பாதுகாப்பு virus – Autorun.inf


இப்பொழுது அனைவரின் கைகளிலும் பென் டிரைவ் புழங்குவது, நமது தொழில்நுட்ப வளர்ச்சிக்கான ஒரு சிறு அடையாளமே.ஒரு  குறிப்பிட்ட  கணினியிலிருந்து, தங்களுக்கு தேவையான தகவல்களை உடனடியாக சேமித்துக் கொள்ள CD/DVD ஆகியவற்றை விட ஒரு சிறந்த எளிய சாதனமாக இருப்பது இந்த Flash/Pen டிரைவ்கள்தான்.
ஆனால், இந்த பென் டிரைவ்களின் மூலமாகவே பெரும்பாலான NewFolder.exe virus, kinza.exe virus, W32.Rontokbro.B@mm virus,  Regsvr.exe போன்ற வைரஸ்கள் மற்றும் மால்வேர்கள் வெகு விரைவாக உங்கள் கணினியை தாக்குகின்றன. இது போன்ற மோசமான பாதிப்புகளை உருவாக்கக் கூடிய இந்த வைரஸ்கள் விரைவாக, நமது கண்காணிப்பை மீறி நமது கணினியில் பரவுவதற்கு அதில் உள்ள Autorun.inf என்ற ஃபைல் தான் முக்கிய பங்காற்றுகிறது. அப்படி என்னதான் சக்தி இருக்கிறது இந்த Autorun.inf கோப்பில் என்று பார்த்தால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் windows 95 பதிப்பு வெளி வந்த பொழுது, இது புழக்கத்திற்கு வந்தது. அதாவது, விண்டோஸ் 95 இயங்குதளத்தில்  CD யை திறப்பதற்கு முன்பாகவே அல்லது அந்த சிடியை My Computer -ல் இரட்டை க்ளிக் செய்யும் பொழுது,    இந்த Autorun அந்த CD யின் ரூட் டைரக்டரியில் உள்ள Autorun.inf  கோப்பை படித்து அதில் தரப்பட்டுள்ள கட்டளைகளை செயல்படுத்தும் பங்காற்றுகிறது. உதாரணமாக கீழே தரப்பட்டுள்ளது ஒரு Autorun.inf கோப்பில் உள்ள கட்டளைகள்.
[autorun]
open=autorun.exe
icon=autorun.ico
label= My Thumb Drive(98XXXXXXXX)
   
ஒரு பாதிக்கப்பட்ட பென் ட்ரைவை நல்லதொரு Antivirus மற்றும் Anti malware  உள்ள கணினியில் திறந்து, Tools -> Folder Options சென்று Show hidden files and folders க்ளிக் செய்து விட்டு, அதில் உள்ள கோப்புகளின் விவரங்களை பார்க்கும் பொழுது,
Hidden வடிவில் அந்த பென் டிரைவில் உள்ள வைரஸ்களை (நமக்கு சம்பந்தமில்லாத / நாம் உருவாக்காத கோப்புகள்) காண முடியும். (இப்படி காண்பிப்பது போல, வைரஸ் தாக்கப்பட்ட கணினியில் காண்பிக்காது. அவற்றில் Folder Options வசதி நீக்கப் பட்டிருக்கும்.) இவற்றை நமது கணினியில் ஏற்றுகின்ற வேலையை இந்த Autorun.inf கோப்புகள் செய்கின்றன. 
இப்படி சந்தேகமுள்ள பென் ட்ரைவ்களை நமது கணினியில் இணைத்த பிறகு, நேரடியாக My Computer -இல் சென்று திறக்காதீர்கள். Start -> Run இற்கு சென்று அந்த பென் ட்ரைவின் ட்ரைவ் லெட்டரை கொடுங்கள் (H:) இனி திறக்கும் Explorer -இல் மேலே குறிப்பிட்டிருப்பது போல, Show hidden files and folders என்ற வசதியை enable செய்து கொள்ளுங்கள். இனி அந்த பென் டிரைவில், உங்களுக்கு சம்பந்தமில்லாத, .EXE கோப்புகள் ஸ்கிரிப்ட் கோப்புகளை shift+del கொடுத்து நீக்கி விடுவது நல்லது.      
இது போன்ற தாக்குதல்களிலிருந்து நமது கணினியை காக்க No Autorun என்ற இலவச கருவி மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
இந்த மென்பொருள் கருவியை நமது கணினியில் பதிந்து கொள்வதன் மூலமாக இது போன்ற தாக்குதல்களிலிருந்து தப்பலாம்.
.

இரகசிய கோப்புகளை பாதுகாக்க ஒரு சின்ன ட்ரிக்


பலரும் தங்களது வன்தட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட  பார்ட்டிஷன்களை வைத்திருப்பது வழக்கம். தங்களுக்கு தேவையான, இரகசியமான கோப்புகளை ஒரு குறிப்பிட்ட ட்ரைவில் வைத்திருப்போம். ஒருவேளை உங்கள் கணினி, குடும்ப உறுப்பினர்கள் அல்லது அலுவலக சகாக்கள் என பலரும் உபயோகிப்பதாக இருந்தால், இது போன்ற கோப்புகளை மற்றவர்கள் பார்வையிடாமலோ அல்லது டெலிட் செய்யாமலோ தடுக்க விண்டோஸில் ஒரு சின்ன ட்ரிக் என்னவென்று பார்க்கலாம்.    
நாம் எப்படி இதை சாத்தியப்படுத்தப் போகிறோம் என்பதை முதலில் சொல்லி விடுகிறேன். அதாவது, நமது இரகசிய, முக்கிய கோப்புகள் மற்றும் கோப்புறைகள் அனைத்தையும் தனியாக ஒரு ட்ரைவில் வைத்துவிட்டு, அந்த குறிப்பிட்ட ட்ரைவை எவரும் கையாள முடியாதவாறு முடக்கப் போகிறோம். 
Start menu வில் Run அல்லது search box (Windows vista/7) சென்று gpedit.msc என தட்டச்சு செய்து என்டர் கொடுங்கள். 
இப்பொழுது திறக்கும் Local Group Policy Editor விண்டோவில் இடதுபுற பேனில் User Configuration -> Administrative Templates -> Windows Components -> Windows Explorer என்ற பகுதிக்கு செல்லுங்கள். அங்கு Windows Explorer ஐ க்ளிக் செய்தபிறகு, வலது புற Settings டேபில்Prevent access to drives from My Computer என்பதை இரட்டை க்ளிக் செய்திடுங்கள். 
இனி திறக்கும் வசனப்பெட்டியில் enabled ரேடியோ பட்டனை கிளி செய்து கொள்ளுங்கள். பிறகு கீழே உள்ள options பெட்டியில் எந்தெந்த ட்ரைவ்களை Restrict செய்ய வேண்டுமோ அவற்றை தேர்வு செய்து கொள்ளுங்கள். 
அவ்வளவுதான்! நம்ம ட்ரிக் முடிஞ்சது. இனி My Computer திறந்து பார்க்கும் பொழுது, நாம்restrict செய்த ட்ரைவ் தெரியும், ஆனால் அதை திறக்க முயலும் பொழுது, கீழே தரப்பட்டுள்ளது போன்ற பிழைச் செய்தி வரும். 
மறுபடியும் பழையபடி மாற்ற, மேலே சொன்ன அதே வழியை பின்பற்றி Disable க்ளிக் செய்தால் போதுமானது. இந்த ட்ரிக்கை விண்டோஸ் ஹோம் பதிப்புகள் தவிர்த்து மற்ற பதிப்புகளில்  செய்ய இயலும். (Administrative Rights உங்களுக்கு இருக்க வேண்டும்) 
.

Q-Dir File Manager – பயனுள்ள கருவி!


நமது கணினியில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட பார்ட்டிஷன்களில் கோப்புகளை காப்பி செய்வது, மூவ் செய்வது, ஒப்பிட்டு பார்ப்பது போன்ற பல காரியங்களுக்காக நாம் வழக்கமாக உபயோகிக்கும் விண்டோஸ் Explorer ஒரே ஒரு pane மட்டுமே உள்ளதால் நம்மால் விரைவாக, துல்லியமாக கோப்புகளை கையாள இயலுவதில்லை.
இது போன்ற கோப்புகளின் மேலாண்மைக்காகவே Multi pane வசதி கொண்ட Q-Dir என்ற மென்பொருள் கருவி பல வகையிலும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது. 
ஒரே விண்டோவில் அதிக பட்சமாக நான்கு pane களை வைத்துக் கொள்ள முடியும். இதன் மூலமாக ஒரே சமயத்தில் நான்கு கோப்புறைகள் அல்லது நான்கு ட்ரைவ்களை கையாள முடியும்.
Tree View உட்பட நமக்கு தேவையான வகையில் கோப்புகளின் பட்டியலை  மாற்றியமைக்க முடியும்.
இதிலுள்ள options பகுதிக்கு சென்று, Context menu வில் புதிதாக எதாவது சேர்க்க வேண்டுமென்றால் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் preview வசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதிலுள்ள Colors டேபிற்கு சென்று குறிப்பிட்ட கோப்பு வகைகளுக்கு விருப்பமான நிறங்களை தேர்வு செய்து கொள்வதன் மூலமாக பலத்தரப் பட்ட கோப்பு வகைகளையும் எளிதாகவும், விரைவாகவும் கையாளுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் பல வசதிகள் இந்த மென்பொருளில் தரப்பட்டுள்ளது பயன்படுத்திப் பாருங்கள்.
   
.

Bing தேடுபொறியில் தோன்றும் படங்களை சேமிக்க


Google, Yahoo போல Bing தேடுபொறியும் பலர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தேடுபொறியில், முதல் பார்வையிலேயே அனைவரையும் கவர்வது இதன் பின்புலத்தில் உள்ள அழகான படங்கள்தான். 
இது போன்ற படங்களை நமது கணினியில் தரவிறக்கி கொண்டால், பிறகு இதை சுவர் தாளாகவோ, அல்லது மற்ற உபயோகத்திற்கோ வைத்துக் கொள்ளலாம் என பலரும் யோசித்திருப்பார்கள். ஆனால் இதை மற்ற தளங்களில் உள்ளது போல, வலது க்ளிக் செய்து சேமிக்க முடியாது. இதற்காக ஒரு சில கருவிகள் பயன்படுகின்றன. ஆனால் இவற்றில் எதையும் பயன்படுத்தாமல், இந்த படங்களை நெருப்பு நரி உலாவியில் எப்படி சேமிப்பது என்பதை பார்க்கலாம். 
முதலில் உங்கள் நெருப்பு நரி உலாவியில் Bing தளத்திற்கு செல்லுங்கள். தளம் முழுவதுமாக திறந்த பிறகு, Tools க்ளிக் செய்து Page Info செல்லுங்கள்.
இப்போது திறக்கும் விண்டோவில் Media tab ஐ க்ளிக் செய்து, சரியான Bing பின்புல படத்தின் கோப்பை தேர்வு செய்து, கீழே உள்ள Save as பொத்தானை க்ளிக் செய்யுங்கள். 
இனி எங்கு சேமிக்க வேண்டும் என்பதை கொடுத்துவிட்டால் போதுமானது. அவ்வளவுதான்.