பயன்பாட்டு மென்பொருட்களை உருவாக்கிடும் நிறுவனங்களில் பணிபுரியும் நிரல்தொடர் எழுதுபவர்கள் அதிக உற்பத்தி திறனை காண்பிக்க வேண்டும் என்ற அழுத்தத்தினால் ஆயிரக்கணக்கான குறிமுறைகளின் வரிகளைctrl+c ,Ctrl+v ஆகிய இரு கட்டளைகளை பயன்படுத்தி மற்றதிறமூலங்களிலிருந்து நகலெடுத்து ஒட்டுவதன்வாயிலாக உருவாக்குபவர்களாகவே உள்ளனர் அதிலும் திறமூல மென்பொருட்களை உருவாக்கிடும்போது இவ்வாறான நகலெடுத்தல் ஒட்டுதல் செயல் மிகஅதிகஅளவில் பயன்படுத்த படுகின்றது இவ்வாறான நகல்குறிமுறைகளை மூன்று வகைகளாக பிரிக்கலாம்
வகை1 நகல்குறிமுறை சொற்களுக்கிடையே காலி இடைவெளி புதியவரிகள் ஆரம்பித்தல் கருத்துகளை பதிவுசெய்தலை ஆகியவைதவிர மிகுதி அனைத்து குறிமுறைகளும் மூலத்தில் உள்ளவாறே நகலிலும் இருக்கும்
வகை2நகல் குறிமுறை இந்தவகையில் மாறிகள்,செயலிகள் ஆகியவற்றின் பெயர்களை மாற்றியமைப்பதை தவிர இலக்கணபடி குறிமுறைகள் அனைத்தும் மூலத்தில் உள்ளவாறே நகலிலும் இருக்கும்
வகை3 நகல்குறிமுறை இந்த வகையில் மூலத்தில் இருக்கும் குறிமுறையில் ஒரு சில சேர்க்கபட்டும் அல்லது மாறுதல் செய்யபட்டும் அல்லது நீக்கம் செய்யபட்டும் இருக்கும்
வகை4குறிமுறைகளை பகுதி பகுதியாக பிரித்தல் இந்த வகையில் குறிமுறைகளின் சொற்பொருள் அப்படியே இருக்குமாறும் ஆனால் இலக்கணத்தை மட்டும் சிறிது மாற்றி யமைத்திடுவார்கள்
வகை1 வகை2 ஆகிய இரண்டு நகல்குறிமுறைகளில் ஒட்டுதல் செய்திடும்போது மட்டும் மிகச்சரியான மாறுதல்களை செய்திட நிரல்தொடர் எழுதபவர் தவறிவிடுவார்கள் அதனால் ஒரு நிரல்தொடர் உருவாக்குபவரால் நகலெடுத்து உருவாக்கிய நிரல் தொடர்களில் ஏராளமான பிழைகள் இருப்பதாகவும் அவைகளை திருத்தி அமைத்திடுமாறும் செயலிகோப்பாக உருமாற்றிடும்போது திரையில் நம்மிடம் கோரி நிற்கும்
வகை 3 ல் இலக்கணபடி சரியாக இருக்கும் ஆனால் அதன் சொற்பொருள்தவறானதாக அமையும் அதனாலும் ஏராளமான பிழைகள் இருப்பதாகவும் அவைகளை திருத்தி அமைத்திடுமாறும் செயலிகோப்பாக உருமாற்றிடும்போது திரையில் நம்மிடம் கோரி நிற்கும்
அதற்கடுத்ததாக ஒரேகுறிமுறையை நகலெடுத்து ஏராளமான இடங்களில் ஒட்டுதல் செய்திடும்போது ஒட்டுதல் செய்தஅனைத்து இடத்திலும் மிகச்சரியாக மாறுதல் செய்வதை மறந்துவிடுவார்கள் அதனால் பிழைகள் ஏராளமான அளவில் இருப்பதாக சுட்டிகாட்டிடும் பொதுவாக மனித நினைவாற்றலானது குறிப்பிட்ட அளவிற்குமேல் ஏற்காது அல்லது வைத்துகொள்ளமுடியாது அதனால் இவ்வாறே குறிமுறையை ஒட்டுதல் செய்த அனைத்து இடத்திலும் அந்தந்த இடத்திற்கு ஏற்ப என்னென்ன மாறுதல் செய்வது என ஒருநிரல்தொடர் எழுதுபவரால் நினைவில் வைத்துகொண்டு மாறுதல் செய்ய இயலாது,
மேலும் ஒரு பயன்பாட்டிற்கான மில்லியன் கணக்கான குறிமுறைவரிகள் ஒவ்வொன்றையும் அவை சரியாக இருக்கின்றதாவென ஒருநிரல்தொடர்எழுதுபவரால் சரிபார்த்திடமுடியாது இதனை தவிர்க்க இதற்காகவென்று தானாகவே இயங்கும் கருவிமென்பொருட்கள் பயன்படுகின்றன அவ்வாறான simian என்ற வியாபார கருவிமென்பொருள்www.harukizaemon.com/simian/என்ற தளத்திலிருந்து கட்டணத்துடனும் cpd என்ற கருவி மென்பொருள்http://pmd.sourceforge.net/cpd.html என்ற தளத்திலிருந்து திறமூல அடிப்படையிலும் கிடைக்கின்றன இவ்விரண்டும் இலக்கணப்பிழையை(syntex error) மட்டுமே கண்டுபடித்து சரிசெய்ய உதவும் சொற்பொருட்பிழையை(semantic error) அன்று என்பதை மனதில் கொள்க
ஆனால் மென்பொருள் உருவாக்கிடும் நிறுவனங்கள் தேடுபொறிமூலம் தேவையான கட்டளைவரி குறிமுறைகளை தேடிபிடித்து நகலெடுத்து தாங்கள் உருவாக்கிடும் மென்பொருள் குறிமுறைவரிகளில் ஒட்டிகொள்கின்றன இதுமிகஅபாயகரமான வழிமுறையாகும் அதனால் இதனை தவிர்த்து தாங்கள் உருவாக்கும் மென்பொருட்களை மிகதிறன்வாய்ந்த clone detection technique tools ஐ பயன்படுத்தி சரிசெய்து தட்டுத் தடங்கள் இல்லாமல் மிகச்சரியாக இம்மென்பொருல் இயங்கும் என்பதை தாம் வெளியீடுசெய்திடுமுன்பு உறுதிபடுத்திகொள்வது நல்லது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக