சனி, 2 பிப்ரவரி, 2013

விண்டோ எக்ஸ்பி மோட்


நம்முடன் உள்ள அனைவரும் விண்டோ 7இயக்கமுறைமைக்கு மாறிவிட்டார்களே நாமும் அவ்வாறே விண்டோ 7 இற்கு மாறலாம் என ஒருசிலர் முனையும்போது அவர்கள் இதுவரை பயன்படுத்திவரும் பயன்பாடானது விண்டோ எக்ஸ்பியில் மட்டும் இயங்குமாறு கட்டமைக்கபட்டது அதனால் அவைகள் விண்டோ7 -ல் செயல்படாது என்ற முட்டுகட்டை வந்து அவர்களை தடுத்துவிடும் அவ்வாறானவர்களுக்கு கைகொடுப்பதற்கென்றே இந்த விண்டோ எக்ஸ்பி மோட் என்ற வசதி விண்டோ7-ல் அளிக்கபட்டுள்ளது விண்டோ எக்ஸ்பி மோட் என்றால் என்ன என்ற சந்தேகம் இந்நிலையில் எவருக்கும் எழும் அதாவது விண்டோ -7 ஐ அடிப்படையாக கொண்டு செயல்படும் கணினியில் விண்டோ எக்ஸ்பிக்காகவென கட்டமைக்கபட்ட அத்தனை பயன்பாடுகளும் இந்த விண்டோ எக்ஸ்பி மோட் என்ற வசதியின்மூலம் செயல்படுத்தமுடியும் இந்த வசதி விண்டோ-7 இயக்க முறைமை செயல்படும் கணினியில் மெய்நிகர்கணினியாக விண்டோ எக்ஸ்பிக்காகவென கட்டமைக்கபட்ட அத்தனை பயன்பாடுகளையும் விண்டோ எக்ஸ்பி இயக்கமுறைமையை நிறுவுகை செய்யாமலேயே செயல்படுத்தும் திறனை வழங்குகின்றது இது மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடாகும் இது விண்டோ -7-ல் விண்டோ எக்ஸ்பி சூழலை விண்டோ எக்ஸ்பிக்காகவென கட்டமைக்கபட்ட பயன்பாடுகள் செயல்படுவதற்காக உருவாக்குகின்றது

இதனை http://www.microsoft.com/windows/virtual-pc/download.aspxஎன்ற தளத்திலிருந்து முதலில் பதிவிறக்கம் செய்து விண்டோ -7 இயங்கிடும் நம்முடைய கணினியில் நிறுவிகொள்க பின்னர் விண்டோ-7ன் startஎன்ற விண்டோவின் தொடக்க இயக்க பட்டியலை விரியச்செய்து அதில்Windows XP Mode என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக

பிறகு தோன்றிடும் Windows XP Modeஎன்ற திரையில் வழக்கமான நம்முடைய நடைமுறையின்படி இணையம் அல்லது குறுவட்டு வாயிலாக விண்டோ எக்ஸ்பிக்காகவென கட்டமைக்கபட்ட பயன்பாடுகளை நிறுவுகை செய்திடுக
அதன்பின்னர் start => Windows XP Mode=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியபின் விரியும் திரையில் நாம் ஏற்கனவே நிறுவியுள்ள தேவையான பயன்பாட்டினை செயல்படுத்தி பயன்படுத்திகொள்க மேலும் விண்டோ-7ல் உள்ள முன்கூட்டியே கட்டமைக்கபட்ட ஒருசில கருவிகளை கொண்டு விண்டோ எக்ஸ்பிக்காகவென கட்டமைக்கபட்ட பயன்பாடுகளை ஒத்தியங்கிடுமாறு மாறுதல் செய்துகொள்க மேலும் இந்த ஒத்தியங்கசெய்வதற்கான விவரம் வேண்டுமெளில்http://www.microsoft.com/windows/compatibility/windows-7/en-US/default.aspxஎன்ற தளத்திலுள்ள Windows 7 Compatibility Center என்ற பகுதிக்கு சென்று உதிவியை பெற்றுகொள்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக